திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1450 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1450பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்புக்கு கூர்மையாய் போய்ப் புக்கு பிரதி பஷத்தை அழியச் செய்து அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று விருது ஊதித் திரியும்படி பண்ணிணவனே – ஓர் அபதானம் பண்ணினேன் என்று விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா ஸ்வரூப விரோதியைக் கழித்து ஸ்வரூப அனுரூபமான பேற்றை பண்ணித் தர வேணும்) 3
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-3
பதவுரை Show / Hide
குழல் நிறம் வண்ண, Kuzhal Niram Vanna - திருக்குழலின் நிறம் போன்று நீலமான நிறத்தையுடையவனே!, (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
நின் கூறு கொண்ட, Nin Kooru Konda - உனது திருமேனியிலே ஒரு பகுதியை இடமாகவுடையவனும்
தழல் நிறம் வண்ணம், Thazhal Niram Vannam - நெருப்பின் நிறம் போன்ற நிறமுடையனுமான ருத்ரனால்
நண்ணார் நகரம் விழ, Nannaar Nagaram Vizha - பகைவரான அசுரர்களின் முப்புரம் முடியும்படியாக
நனி மலை, Nani Malai - மிகப் பெரிதான மேருமலை போன்ற
சிலை, Silai - வில்லை
வளைவு செய்து, Valaivu Seidhu - வளைத்து
அங்கு, Angu - அதுதன்னிலே
அழல் நிறம் அம்பு அது ஆனவனே, Azhai Niram Ambu Adhu Aanavane - நெருப்புப்போன்ற அம்பில் ஆவேசித்து நின்றவனே!