திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1451 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் – என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை) 4 | நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - (பிரளயமாகிற) ஒரு ஸமயத்தில், (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.)) நிலவொடு வெய்யில் நிலவு இரு சுடரும், Nilavodu Veyyil Nilavu Iru Sudarum - நிலாவோடும் வெய்யிலோடும் கூடி ஸஞ்சரிக்கிற சந்திரஸூர்யர்களையும் உலகமும், Ulagamum - உலகங்களையும் உயிர்களும், Uyirgalum - (அங்குள்ள) பிராணிகளையும் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து நோக்கி கலைதரு, Kalaitharu - மிகச்சிறிய வடிவுகொண்ட குழவியின் உருவினை ஆய், Kuzhaviyin Uruvinai Aayi - குழந்தை ரூபியாய்க் கொண்டு அலை கடல், Alai Kadal - அலையெறிகின்ற கடலினிடையே ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனே! |