திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1452 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாச்யங்களுக்கு எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே) 5 | பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-5 | பதவுரை Show / Hideபார் எழும், Paar Ezhum - ஏழு தீவுகளோடு கூடிய பூமிக்கும் (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.)) கடல் எழும், Kadal Ezhum - ஸப்தஸாகரங்களுக்கும் மலை எழும், Malai Ezhum - ஸப்தகுலாசலங்களுக்கும் ஆய், Aai - நிர்வாஹகனாயிருந்து கொண்டு அங்கு, Angu - அப்படிப்பட்ட பிரளயம் வந்த காலத்து, சீர் கெழும், Seer Kezhum - அழகு மிக்க இ உலகு ஏழும் எல்லாம், I Ulagu Ezhum Ellam - இவ்வுலகங்களேழையும் ஆர் கெழு வயிற்றினில், Ar Kezhu Vayitrinil - அழகு மிக்க திருவயிற்றிலே அடக்கி நின்று, Adakki Nindru - அடக்கி வைத்திருந்தவனாய் ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே, Oru Ezhuthu Oru Uru Aanavane - அகாரத்திற்கு முக்கியமான பொருளாயிருப்பவனே! |