திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1453 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ ஜகதாரரானாய் சர்வாதிகனாய் இருப்புதி என்று பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி யருளிவுதி யாகில் – நானும் மெய்யே இத்தை அருவருத்தேன்) 6 | கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6 | பதவுரை Show / Hideகார் கெழு, Kaar Kezhu - மேகங்கள் மிகப்படிந்திருக்கப் பெற்ற (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.)) கடல்களும், Kadalgalum - ஸமுத்ரங்களுக்கும் மலைகளும், Malaihalum - மலைகளுக்கும் ஆய், Aai - தாரகனாயும் ஏர் கெழும், Eer Kezhum - ஒழுங்குபட்டிருக்கிற உலகமும் ஆகி, Ulagamum Aagi - லோகங்களுக்கும் நிர்வாஹகனாயும் முதலார்களும், Muthalarhalum - பிரதாநரான பிரமன் முதலியோர்க்கும் அறிவு அரு நிலையினை ஆய், Arivu Aru Nilaiyinai Aai - அறிய முடியாத ஸ்வபாவத்தை யுடையவனாயும் சீர் கெழு நால் மறை ஆனவனே, Seer Kezhu Naal Marai Aanavane - சிறந்த நான்கு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாயு மிருக்கும் பெருமானே, |