திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1454 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1454பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால் இரண்டையும் சொல்லா நின்றது இறே ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் – அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே) 7
உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய் பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-7
பதவுரை Show / Hide
இருக்கு உறும் அந்தணர், Irukku Urum Andhanar - வேதம் வல்லவரான பிராமணர்கள் (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
அமரர்கள், Amarar - தேவதைகளினால்
பெருக்க மொடு அமர, Perukka Modu Amara - (தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக
சந்தியின் வாய், Sandhiyin Vaai - ஸந்தியா காலந்தோறும்
உருக்குறு நறு நெய் கொண்டு, Urukkuru Naru Ney Kondu - உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு
ஆர் அழலில், Aar Azhalaal - ஆர்ந்த அக்நியில்
நல்கும், Nalkum - ஹோமம் பண்ணுவதற் குறுப்பான
இருக்கினில், Irukkiniil - வேதத்திலுள்ள
இன் இசை ஆனவனே, In Isai Aanavane - பிரணவத்திற்குப் பிரதிபாத்யனானவனே!