திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1455 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1455பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த வளையமும் நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த சுத்தியை உடையவனே –உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியை போக்கின நீயே நான் கண்ணாலே காணலாம் படி என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்) 8
காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம் ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-8
பதவுரை Show / Hide
போது அலர் நெடு முடி, Podhu Alar Nedum Mudi - உரிய காலங்களிலுண்டான புஷ்பங்களை யணிந்த நீண்ட திருவபிஷேகத்தையுடைய (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
புண்ணியனே, Punniyanne - பரிசுத்தனே!
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள்
காதல் செய்து, Kaadhal Seidhu - அன்பு செய்து
தரும், Tharum - கொடுக்கிற
வேதனை, Vedhanai - துக்கரூபமான
கலவி அது, Kalavi Adhu - கலவிக்கு அடியாகவுள்ள
வினை, Vinai - கருமமானது
ெருவுதல் ஆம், Eruvuthal Aam - (எனக்கு) அச்சந்தருவதாக வுள்ளது;
ஆதலில், Aadhalil - ஆகையினால்,
உனது அடி நான் அணுகுவன், Unathu Adi Naan Anuguvan - (அந்தக் கருமம் தொலையும்படி) உனது திருவடிகளை நான் வந்து பணிகின்றேன்;