திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1456 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1456பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய் அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரதயா சேஷமாக உடையவனே – எனக்கு இங்கனே இருப்பதொரு அதிகாரத்தைத் தந்து கால்கட்டாம் அது எனக்கு வேண்டா அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை) 9
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9
பதவுரை Show / Hide
ஓதல் செய், Othal Sei - பரம்பரையாக ஓதப்பட்டு வருகிற (- (ஆண்டாய் * * * வேண்டேன் -.))
நால் மறை ஆகி, Naal Marai Aagi - நான்கு வேதங்களுக்கும் நிர்வாஹகனாய்
உம்பர் ஆதல் செய் மூ உரு ஆனவனே, Umbar Aadhai Sei Moo Uru Aanavane - மேன்மையுடையவராகச் செய்யப்பட்டிருக்கின்ற பிரமன் சிவனிந்திரனாகிய மூவர்க்கு நியாமகனாயிருப்பவனே!
சாதலும் பிறத்தலும் என்ற இவற்றை, Sadhallum Piraththallum Endra Ivarthai - சாவதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தை
காதல் செய்யாது, Kaadhal Seiyaadhu - விரும்பாமல்
உன கழல் அடைந்தேன், Una Kazhal Adaindhen - உனது திருவடிகளை அடைந்தேன்;