திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1458 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது) 1 | பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-1 | பதவுரை Show / Hideபுன் சொல், Pun Sol - (பிறர் சொல்லும்) அற்பமான வார்த்தைகளை நெஞ்சில், Nenjil - நெஞ்சிலே பொறுத்தேன், Porutthen - பொறுத்துக்கொண்டிருந்தேன்; ஐம்புலன்கள் கடன் ஆயின, Aimpulankal Kadan Aayin - பஞ்சேந்திரியங்களுக்கும் கடமையாக ப்ராப்தமாயுள்ள பொருள் இன்பம் என இரண்டும், Porul Inbam Ena Irandum - அர்த்தம், காமம் என்ற இரண்டையும் இறுத்தேன், Irutthen - அநுபவித்துத் தீர்த்தேன்; ஆர்வம் செற்றம், Aarvam Settram - (வேண்டியவர்களிடத்தில்) ப்ரீதியென்ன, (வேண்டாதவர்களிடத்தில்) பகையென்ன ஆகிய இவற்றை வாயிலொட்டி, Vaayilotti - ‘அவசியம் நிறைவேற்றி விடக்கடவுன்’ என்று பிரதிஜ்ஞை பண்ணி அறுத்தேன், Arutthen - நிறைவேற்றி விட்டேன்; அவை தன்னை, Avai Thannai - அந்த ராகத்வேஷங்களை மனத்து அகற்றி, Manaththu Akattri - (இப்போது) நெஞ்சில் நின்றும் நீக்கினவனாய்க் கொண்டு வெறுத்தேன், Verutthen - அவற்றில் வெறுப்புற்றவனாகி, திருவிண்ணகர் மேயவனே நின் அடைந்தேன், Thiruvinnagar Meyavane Nin Adaindhen - திருவிண்ணகர்ப் பெருமானே! உன்னைச் சரணம் புகுந்தேன். |