திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1461 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர் அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே) 4 | பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-4 | பதவுரை Show / Hideபெற்ற மக்கள், Petra Makkal - வயிற்றில் பிறந்த பிள்ளைகள் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;)) பெண்டிர், Pendir - மனைவியர் என்ற இவர், Endra Ivar - இத்யாதிகளான பந்துக்கள் பின் உதவாது அறிந்தேன், Pin Udhavathu Arindhen - முடிவு காலத்துக்குத் துணையாக மாட்டார்க ளென்பதைத் தெரிந்து கொண்டவனாய் பிறிந்தேன், Pirindhen - (அவர்களை) விட்டொழிந்தேன்; நீ பணித்த அருள் என்னும், Nee Paniththa Arul Ennum - (முன்பு திருத்தேர்த் தட்டிலே) நீ அருளிச் செய்த சரமச்லோகமாகிற ஒள் வாள் உருவி, Ol Vaal Uruvi - ஒளி பொருந்திய கத்தியை உறையில்நின்றும் கழற்றி, ஐம்புலன்கள் இடர் தீர, Aimpulankal Idar Theera - சப்தாதிவிஷயங்களாலே உண்டாகிற துயர் தொலையும்படி எறிந்தேன், Erindhen - வீசினேன்; வெறிந்து வந்து, Verinthu Vandu - அகிஞ்சானாய்க்கொண்டு வந்து நின் அடிக்கே செறிந்தேன், Nin Adikke Serindhen - உனது திருவடிகளுக்கே பொருந்தினேன். |