திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1463 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த – அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது) 6 | கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6 | பதவுரை Show / Hideகல்லா, Kallaa - (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத) கல்விபயிரா (- (திருவிண்ணகர்மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-.)) ஐம்புலன்கள் அவை, Aimpulankal Avai - பஞ்சேந்திரியங்களானவை கண்ட ஆறு, Kanda Aaru - செய்ய நினைத்தவிதமாக செய்யகில்லேன், Seyyakillein - நான் செய்யமாட்டுகின்றிலேன்; மல்லர், Mallaiyar - வலிமையுள்ள பெருமானே!, மல் அமருள், Mal Amarul - மற்போரில் மல்லர் மாள, Mallaiyar Mal - (சாணூரன் முதலிய) மல்லர்கள் முடியும்படியாக மல் அடர்த்த, Mal Atartta - (அவர்களுடைய) வலியையழித்த மல்லா, Malla - மல்தொழில் வல்லவனே!, மல்லம் அம் சீர், Mallam Am Cir - மிகவும் அழகிய செல் வத்தையுடைத்தாய் மதிள், Matil - மதிள்களால் சூழப்பட்டதாய் நீர், Nir - சுற்றிலும் நீர்க்கோட்டையை யுடைத்தான இலங்கை, Ilankai - லங்காபுரியை அழித்த, Alitta - நாசம்செய்த வில்லா, Villa - சார்ங்கத்தையுடையவனே! |