திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1468 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1468பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன் துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே – உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை) 1
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே –6-3-1
பதவுரை Show / Hide
இன்பம், Inbam - (உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை (- (திருவிண்ணகரானே!-))
துறப்பேன் அல்லேன், Thurappeen Alleen - தவிரமாட்டேன்;
துறவாது, Thuravaadhu - அவ்வின்பத்தைத்தவிராதவனாகி
என்றும், Endrum - ஒருநாளும்
நின் உருவம் மறப்பேன் அல்லேன், Nin Uruvam Marappeen Alleen - உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்;
மறவாது, Maravaadhu - அவ்வடிவழகை மறவாதவனாகி
யான், Yan - நான்
உலகில், Ulagil - ஸம்ஸாரத்தில்
பிறப்பேன் ஆக எண்ணேன், Pirappeen Aaga Ennen - இனிப் பிறவியெடுக்க எண்ணமற்றவனாயிருக்கின்றேன்;
பிறவாமை பெற்றது, Piravaamai Pettrathu - இனிப்பிறவாதபடி பேறுபெற்ற இதுதானும்
நின் திறத்தேன் ஆதன்மை யால், Nin Thiraththen Aadhanmai Yaal - உனக்கே ஆட்பட்டதனாலேயாம்.