திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1469 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1469பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன் பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் – இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே – நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம் பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம்) 2
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே –6-3-2
பதவுரை Show / Hide
அறம் தானாய்த் திரிவாய், Aram Thaanayth Thirivaai - தானே ஸாக்ஷாத்தர்மமாய் ஆள்பார்த்துத் திரியுமவனே!, (- (திருவிண்ணகரானே!- ;) (திருமாலே!- ;))
சுற்றம், Sutram - (ஸம்ஸாரிகளுடன்) உறவையும்
ஆர்வம், Aarvam - அன்பையும்
செற்றம், Settram - விரோதத்தையும்
துறந்தேன், Thurandhen - தவிர்ந்தேன்;
துறந்தமை யால், Thurandhamai Yaal - தவிர்ந்ததனால்,
நின் அடிக்கே, Nin Adikke - உன் திருவடிகளிலேயே
அடிமை சிறந்தேன், Adimai Sirandhen - கைங்கர்யம் பண்ணவுரியனானேன்;
உன்னை, Unnai - உன்னை
என் மனத்தகத்தே, En Manaththakaththae - எனது நெஞ்சினுள்ளே
திறம்பாமல் கொண்டேன், Thirampamal Konden - தவறாது தரித்துக் கொண்டேன்