திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1470 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1470பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார்) 3
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும் ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன் கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே –6-3-3
பதவுரை Show / Hide
கோனே, Kone - ஸ்வாமிந்!
குறுங்குடியுள் குழகா, Kurungudiyul Kuzhaga - திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள
வரு புனல் சூழ் திரு விண்ணகரானே, Varu Punal Sooz Thiru Vinnakaranne - பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
மான் ஏய் நோக்கு நல்லார், Maan Aey Nookku Nallaar - மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது
மதி போல் முகத்து உலவும், Mathi Pol Mugaththu Ulavum - சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற
ஊன் எய் கண் வாளிக்கு, Oon Aey Kann Vaalikku - மாம்ஸமயமான கண்களாகிற பாணத்துக்கு
உடைந்து, Udaindhu - அஞ்சி நடுங்கி
ஓட்டந்து, Oottandhu - ஓடிவந்து
உன் அடைந்தேன், Un Adaindhen - உன்னைச் சரணடைந்தேன்