திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1471 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1471பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் – உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார் ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் – ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன்) 4
சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே –6-3-4
பதவுரை Show / Hide
சாந்து ஏந்தும் மெல் முலையார், Santhu Aenthum Mel Mulaiyaar - குங்கும மணிந்த மெல்லிய முலைகளையுடையரான மாதர்களது (- (திரு விண்ணகரானே!- ;))
தடம் தோள், Thadam Thol - பருத்த தோள்களை
புணர் இன்பம் வெள்ளத்து, Punar Inbam Vellaththu - அணைவதனாலுண்டாகும் இன்பசாகரத்தில்
ஆழ்ந்தேன், Aazhnthen - (கீழ் நாட்களில்) மூழ்கிக்கிடந்தேன்; (அதனால்)
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன், Aru Narakaththu Azhundhum Payan Padaiththen - கொடிய ஸம்ஸாரநரகத்தில் அழுந்திக்கிடப்பதாகிற பலனைப் பெற்றேன்;
புண்ணியனே, Punniyanne - புண்யமே வடிவெடுத்திருக்கும் பிரானே!
போந்தேன் நின் அடைந்தேன், Pondhen Nin Adaindhen - (உன் திருவடிவாரத்திலே) வந்து சேர்ந்தவனாய் உன்னையடைந்தேன்;
உன்னை எய்தி, Unnai Eydhi - உன்னைக் கிட்டி
என் தீ வினைகள் தீர்ந்தேன், En Thee Vinaigal Theerndhen - எனது கொடும்பாவங்கள் தொலையப்பெற்றேன்.