திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1475 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1475பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ) 8
முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால் விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8
பதவுரை Show / Hide
முளிந்து தீந்த, Mulinthu Theentha - உலர்ந்து தீஞ்சுபோன (- (திரு விண்ணகரானே!- ;))
வெம் கடத்து, Vem Kadathu - வெவ்விய பாலைநிலத்திலே
மூரிப் பெருங்களிற்றால், Mooraip Perungkalittraal - வலிய பெரிய யானையினால்
விளிந்து, Vilinthu - தள்ளப்பட்டு
தீந்து, Theinthu - கெட்டுப்போன
மா மரம் போல் வீழ்ந்தாரை, Maa Maram Pol Veelndhaarai - பெரியமரங்கள் போல் தொலைந்து போனவர்களை
நினையாதே, Ninaiyaadhe - நினையாமல்
நின்பால், Ninpaal - உன்னிடத்தில்
அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு, Alinthu Oorntha Sindhai Adiyeerkku - கனிந்து தெளிந்த மனமுடையேனான எனக்கு
தெளிந்து, Thelinthu - இந்த ஸம்ஸாரக் கலக்கங்கள் நீங்கி
வான் உலகம் எய்துவது என்று, Vaan Ulagam Eydhuvathu Endru - பரமபதம் அடையும் நாள் எதுவோ?