திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1476 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை- எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்- நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி – தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ) 9 | சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே –6-3-9 | பதவுரை Show / Hideமல்லா, Malla - மிடுக்குடையவனே! (- (திரு விண்ணகரானே!)) குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே! மதுசூதனே, Madhusoodhane - மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே! உலகில் செல்லா, Ulavil Chella - லோகத்தில் நடையாடாத (அபூர்வமான) நல் இசையாய், Nal Isaiyai - நல்ல கீர்த்தியை யுடையவனே!. நம்பீ, Nambi - பரிபூர்ணனே!, திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியை மார்வில் உடையவனே! சொல்லாய், Sollaai - அடியேனுக்கு மறுமொழி கூறியருளவேணும்; உனக்கு ஆகி, Unakku Aagi - உன்விஷயத்தில் தொண்டுபட்ட, Thondupatta - அடிமைபூண்ட நல்லேனை, Nalleinai - விலக்ஷணனானவென்னை வினைகள் நலியாமை, Vinaigal Naliyamai - பாவங்கள் தொந்தரவு செய்யாதபடி நம்பு, Nambu - ஆதரித்தருளாய். |