திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1480 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1480பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 3
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன் செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர் நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-3
பதவுரை Show / Hide
கொங்கு ஆர் குழலார், Kongu Aar Kuzhalar - (தலைப் பூக்களில் நின்றும் பெருகின) தேன்நிறைந்த கூந்தலையுடைய மாதர் (- (நாம் தொழுதும் நெஞ்சமே! எழு-.))
கூடி இருந்து, Koodi Irundhu - திரளாக இருந்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
ஐயா, Aiyya - ‘கிழவனாரே!
இனி, Ini - இப்படி நீர் கிழத்தன மடைந்த பின்பு
எம்மை, Emmai - எங்களையும்
எம் கோலம், Em Kolam - எங்களுடைய அலங்காரத்தையும்
என் காண்பது, En Kaanbadhu - எதுக்காகப் பார்ப்பது?’
என்னாத முன், Ennaadha Mun - என்று திரஸ்தரிப்பதற்கு முன்னே,
செங்கோல் வலவன் தான், Sengol Valavan Thaan - அரசாட்சி புரிந்த சோழராஜன்
பணிந்து, Panindhu - ஆக்ரமித்து
ஏத்தி, Aethi - துதித்து
திகழும் ஊர், Thigazhum Oor - விளங்கப் பெற்ற திவ்யதேசமாய்
நம் கோன், Nam Kon - எம்பெருமானுடையதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை