திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1481 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1481பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம்) 4
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன் செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4
பதவுரை Show / Hide
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற, Kombum Aravamum Valliyeum Vendra - வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த (- (நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.))
நுண் ஏர் இடை, Nun Aer Idai - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும்
வம்பு உண் குழலார், Vambu Un Kuzhalar - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள்
வாசல் அடைந்து, Vaasal Adaindhu - வாசற்கதவைப் போட்டுவிட்டு
இகழாத முன், Ikazhaadha Mun - அவமானப்படுத்துவதற்கு முன்னே-,
கமுகு இனம், Kamuku Inam - பாக்குமரங்களின் திரள்கள்
செம்பொன், Sembon - செவ்விய பொன் போலே
கனியும், Kaniyum - பழுத்திருக்கப்பெற்ற
செழு சோலை, Sezhu Solai - வளம்மிக்க சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பட்டதும்
நம்பன், Namban - விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை