திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1487 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1487பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10
பதவுரை Show / Hide
பிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள்
நம்மை, Nammai - நம் விஷயத்தில்
பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே,
நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே!
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’  என்று உபதேசித்தவரும்.
கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய
சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை
மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள்
வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும்
இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர்.