திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1488 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் – அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம்) 1 | கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1 | பதவுரை Show / Hideமுந்நீர், Munnir - ஸமுத்ரத்தை கலங்க, Kalanga - கலங்கும்படியாக கடைந்து, Kadaindhu - கடைந்து அமுதம் கொண்டு, Amudham Kondu - (அதில் நின்று அமுதமெடுத்து இமையோர் துளங்கல் தீர நல்கு, Imayor Thulankal Theera Nalku - தேவர்களின் கலக்கம் தீரும்படியாக (அவர்களுக்குக்) கொடுத்தருளியவனும் சோதி சுடர் ஆய், Sothi Sudar Aay - பரஞ்சோதியா யுள்ளவனும் வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான், Valangai Aazhi Idangai Sangam Udaiyaan - வலத்திருக்கையில் திருவாழி யையும் இடத்திருக்கையில் திருச்சங்கையும் உடையவனுமான எம்பெருமானுடைய ஊர், Oor - திவ்ய தேசம் நலம் கொள் வாய்மை, Nalam Kol Vaimai - நன்மை கொண்ட ஸத்யவாதித்வத்தை யுடையவரான அந்தணர், Andhanar - பிராமணர்கள் வாழும், Vazhum - வாழுமிடமான நறையூர், Naraiyoor - திருநறையூராகும். |