திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1489 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற திரு உகிராலே இரண்டு கூறாம் படி கீண்டு பொகட்டு- ஆஸ்ரிதனுக்கு பிரதிஞ சம காலத்திலேயே உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் – ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன்) 2 | முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2 | பதவுரை Show / Hideமுனை, Munai - போர்புரிவதில் ஆர், Ar - பொருத்தமுடைய சீயம் ஆகி, Seeyam Aagi - நரஸிம்ஹமூர்த்தியாய்த் திருவவதரித்து அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய முரண் மார்வம், Muran Marvam - முரட்டு மார்பை புனை, Punai - அழகு பொருந்தி வாள், Vaal - ஒளிபொருந்திய உகிரால், Ukiral - நகங்களினால் போழ்பட, Pozhpada - இரண்டு பிளவாகும்படி ஈர்ந்த, Eerndha - கிழித்துப்போட்ட புனிதன், Punithan - பரமபவித்திரனான பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எது வென்றால்) குயில், Kuyil - குயில்களானவை சினை ஆர் தேமா, Sinai Ar Thema - தழைப்புவாய்ந்த தேன் மா மரங்களுடைய செம் தளிர், Sem Thalir - சிவந்த தளிர்களை கோதி, Kothi - கொந்தி கூவும், Koovum - கூவப்பெற்றனவும் நனை ஆர் சோலை சூழ்ந்து, Nanaik Ar Solai Soozhndhu - பூ மொட்டுகள் நிறைந்திருக்கப்பெற்றனவுமான சோலைகளால் சூழப்பட்டு அழகு ஆய, Azhagu Aaya - ஆழகுடைத்தான நறையூர், Naraiyoor - திருநறையூராம். |