திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1491 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1491பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 4
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர் பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே –6-5-4
பதவுரை Show / Hide
உறி ஆர் வெண்ணெய் உண்டு, Uri Aar Vennai Undu - உறிகளிலே நிறைத்து வைத்த வெண்ணெயை வாரி உட்கொண்டு
உரலோடும் கட்டுண்டு, Uralodum Kattundu - (அக்குற்றத்திற்காக) உரலோடு சேர்த்துக்கட்டப்பட்டவனும்
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு, Veri Aar Koondhal Pinnai Poruttu - பரிமளம் மிக்க கூந்தலையுடையம நப்பி்ன்னை பிராட்டிக்காக
ஆன் வென்றால், Aan Vendraal - (ஏழு) எருதுகளை வலியடக்கினவனுமான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
பொறி ஆர் மஞ்ஞை, Pori Aar Manjai - புள்ளிகள் நிரம்பிய மயில்கள்
பூ பொழில் தோறும்நடம் ஆட, Poo Pozhil Thorumnadam Aada - பூஞ்சோலைகளெங்கும் கூத்தாடப் பெற்றதும்
வண்டு, Vandu - வண்டுகள்
நறு நாள் மலர் மேல், Naru Naal Malar Mel - மணம்மிக்க அப்போதலர்ந்த  பூக்களிலே இருந்துகொண்டு
இசை பாடும், Isai Paadum - இசைப்பாட்டுகளைப் பாடப்பெற்றதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூர்.