திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1492 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிருது ஸ்வ பாவமான தோள் அழகை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக மருதுகளை வேரோடு பறிந்து விழும்படி சாய்த்த சர்வ ரஷகன் வர்த்திக்கிற தேசம்) 5 | விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே –6-5-5 | பதவுரை Show / Hideஏழ் விடை வென்று, Ezhu Vidai Vendru - ஏழெருதுகளை வலியடக்கி (- (அப்படி நடக்க முடியாமையினாலே)) மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய், Men Thol Aaychikku Anban Aay - (மெல்லிய தோளழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனானவனும் நின்ற மருதம் நடையால் சாய்த்த நாதன், Nindra Marudham Nadayal Saayththa Naadhan - நிலைத்து நின்ற (இரட்டை) மருதமரங்களைத் தவழ்கிற நடையினாலே விழத்தள்ளினவனுமான எம்பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) அன்னம், Annam - ஹம்ஸங்களானவை பெடையோடு, Pedaiyodu - (தமது) பேடைகளோடு கூடி பெய் வளையார் தம்பின் சென்று, Pey Valaiyaar Thambin Sendru - செறிந்த வளைகளையணிந்த பெண்களின் பின்னேபோய் நடையோடு இயலி, Nadayodu Iyali - (அவர்களுடைய) நடையை அநுஸரித்து நடக்கப்பார்த்து நாணி ஒளிக்கும், Naani Olikkum - வெட்கமடைந்து ஒளிக்குமிடமான நறையூர், Naraiyoor - திருநறையூராம். |