திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1494 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1494பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் – இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம்) 7
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர் பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே –6-5-7
பதவுரை Show / Hide
முப்புரி நூலும், Muppuri Noolum - யஜ்ஞோபவீதத்தையும்
முந்து நூலும், Mundhu Noolum - அநாதியான வேதாக்ஷர ராசியையும்
முன் ஈந்த, Mun Eentha - முன்னே (தனக்குத்) தந்த
அந்தணாளன், Andhanalan - (ஸாந்தீபிநி யென்னும்) பிராமணனுடைய
பிள்ளையை, Pillaiyai - (கடலில் மூழ்கியிறந்த) புத்திரனை
அந்நான்று, Annanru - (குரு தக்ஷிணை ஸமர்ப்பிக்கிற) அக்காலத்தில்
அளித்தான், Aliththaan - (மீட்டுக்) கொடுத்தருளின பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்,)
புள், Pul - பறவைகள்
பொந்தில், Ponthil - மரத்தின் பொந்துகளில்
வாழும், Vazhum - வாழ்கிற
பிள்ளைக்காகி, Pillaiykaagi - குட்டிகளின் ஆஹாரத்துக்காக
ஓடி, Oodi - ஓடிவந்து
நந்து, Nandhu - நத்தைகளை
வாரும், Vaarum - திரட்டிக்கொண்டு போகப்பெற்ற
பைம்புனல் வாவி, Paimpunal Vaavi - தெளிந்த நீரையுடைய தடாகங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.