திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1495 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும் ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8 | வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த விமலனூர்
கொள்ளைக் கொழு மீன் உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8 | பதவுரை Show / Hideவெள்ளைப்புரவி தேர் விசயற்கு ஆய், Vellai Puravi Ther Visayarku Aayi - வெள்ளைக்குதிரைகள் பூட்டின தேரையுடையனான விசயற்கு ஆய், Visayarku Aayi - அர்ஜுநனுக்காக விறல் வியூகம் விள்ள, Virhal Viyugam Vill - (எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும் சிந்து கோன் விழ, Sindhu Kon Vizha - ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும் ஊர்ந்த, Oorntha - (தேரை) நடத்தின விமலன், Vimalan - பரிசுத்தனான பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) கொள்ளை கொழுமீன் உண் குருகு ஓடி, Kollai Kozhumeen Un Kurugu Odi - மிகுதியாகக் கொழுத்த மீன்களைப் பிடித்துண்கிற கொக்குகள் ஓடிச்சென்று பெடையோடும், Pedaiyodum - தம் பேடைகளோடகூட நள்ளக் கமலம் தேறல் உருக்கும், Nallak Kamalam Therhal Urukkum - செறிந்த இதழ்களைடைய தாமரைப்பூவில் தேனைப் பருகப்பெற்ற நறையூர், Naraiyoor - திருநறையூர் |