திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1496 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1496பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற தன் மேன்மை கிடக்கச் செய்தே ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 9
பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன தேரையூரும் தேவதேவன் சேருமூர் தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9
பதவுரை Show / Hide
பாரை ஊரும் பாரம் தீர, Paarai Oorum Paaram Theera - பூமியில் நடமாடுகின்ற சுமையானது தொலையும்படியாக
பார்த்தன் தன் தேரை ஊரும், Paartthan Than Therai Oorum - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனான
தேவதேவன், Deva Devan - தேவாதிதேவன்
சேரும் ஊர், Serum Oor - நித்யவாஸம் செய்தருளும் திவ்யதேசம் (எதுவென்றால்)
தாரை ஊரும் தண் தளிர் வேலி, Thaarai Oorum Than Thalir Veli - (தேனின்) வெள்ளம் பெருகாநின்ற குளிர்ந்த தளிர்கள் நிறைந்த வேலிகள்
புடை சூழ, Pudai Soozha - நாற்புறமும் சூழப்பெற்று
நாரை ஊரும, Naarai Oorum - நாரைகள் ஸஞ்சரிக்கப்பெற்ற
நல்வயல் சூழ்ந்த, Nalvayal Soozhntha - நல்ல கழனிகளால் சூழப்பட்ட
நறையூர், Naraiyoor - திருநறையூராம்,