திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1499 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே) 2 | கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-2 | பதவுரை Show / Hideநெடு வெள்ளம் கொண்ட காலம், Nedu Vellam Konda Kaalam - பிரளயப் பெருவெள்ளம் உலகங்களை) ஆக்ரமித்தவொரு சமயத்திலே (- (திருநறையூர் மணி மாடம், சேர்மின்கள்.-)) கொழுகயல் ஆய், Kozhukayal Aayi - பருத்த மத்ஸ்யரூபியாய்க் கொண்டு குலவரையில் மீது ஓடி, Kulavaraiyil Meedhu Oodi - குவபர்வதங்களின் மேலே போய் ஸஞ்சரித்து அப்பால், Appaal - அதற்குமேலே அண்டத்து, Andaththu - அண்டபித்தியளவும் எழுந்து, Ezhunthu - கிளம்பி (துள்ளி) இனிது, Inidhu - சுகமாக விளையாடும், Vilaiyadum - விளையாடின ஈசன் எந்தை, Eesan Endhai - எம்பெருமானுடைய இணை அடி கீழ், Inai Adi Keezh - உபயபாதங்களின் கீழ் இனிது இருப்பீர், Inidhu Iruppir - சுகமாகவாழ விருப்பமுள்ளவர்களே! இனம் வண்டு ஆலும், Inam Vandu Aalum - கூட்டமாகத் திரண்ட வண்டுகள் நடமாடப் பெற்ற செழு பொன்னி, Sezhu Ponnni - அழகிய திருக்காவேரியானது உழும் செறுவின் கரைகொணர்ந்து மேல், Uzhuvum Seruvin Karikondru Mel - உழப்படுகிற கழனிகளின் வரப்புகளின் மீது மணி சிந்தி, Mani Sindhi - ரத்னங்களைக் கொண்டுவந்து சிதறத் தள்ளியும் உலகு எல்லாம், Ulaku Ellam - ஸகல ஜனங்களும் சந்தனமும், Sandhanamum - சந்தனக்கட்டைகளையும் அகிலும், Akilum - அகிற்கட்டைகளையும் கொள்ள, Kolla - எடுத்துக்கொள்ளும்படியாக வளம் கொடுக்கும், Valam Kodukkum - வளங்களைக் கொடுக்குமிடமாய் சோழன் சேர்ந்த, Chozhan Serndha - சோழராஜன் பணிசெய்யப்பெற்றதான |