திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1500 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 3 | பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3 | பதவுரை Show / Hideபவ்வம் நீர், Pavvam Neer - கடல் நீரை (- (திருநிறையூர் மணிமாடம் சேர்மின்கள்)) உடை ஆடை ஆகச் சுற்றி, Udai Aadai Aagasuttri - அரையிலுடுத்துக் கொள்ளும் பீதாம்பரமாகச் சுற்றி பார் அகலம் திரு அடி ஆ, Paar Akalam Thiru Adi Aa - பூமிப் பரப்பையெல்லாம் திருவடியாகக் கொண்டு, பவளம் மெய் ஆ, Pavalam Mei Aa - வாயுவைத் திருமேனியாகக் கொண்டு செவ்வி மாதிரம் எட்டும் தோள் ஆ, Sevvi Maadhiram Ettum Thol Aa - அழகிய திசைகளெட்டையும் புஜங்களாகக் கொண்டு அண்டம் திருமுடி ஆ, Andam Thirumudi Aa - அண்டப்பித்தியைத் திருவபிஷேகமாகவுங் கொண்டு நின்றான் பால், Nindraan Paal - நின்ற ஸர்வேச்வரனிடத்திலே செல்ல நிற்பீர், Sella Nirbeer - சென்று சேர விரும்பியிருக்குமவர்களே!, கவ்வை, Kavvai - ஆரவாரத்தையுடையனவாய் மா, Maa - பெரியவையான களிறு, Kaliru - யானைகளை உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு வெண்ணி, Vennni - வெண்ணியென்னுமிடத்தில் ஏற்ற, Etra - எதிர்த்து வந்த கழல் மன்னர், Kazhal Mannar - வீரக்கழலணிந்த அரசர்களினுடைய மணிமுடிமேல், Manimudimel - சிறந்த தலைகளின் மீது காகம் ஏற, Kaagam Eera - காக்கைகள் ஏறி ஜீவிக்கும்படி தெய்வம் வாள் வலம் கொண்ட, Deivam Vaal Valam Konda - திவ்யமான வாட்பட்டையின் வலிவைக் காட்டின சோழன் –, Chozhan - சோழராஜன் சேர்ந்த, Serndha - பணிசெய்யப்பெற்ற |