திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1507 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1507பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார் யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் – ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள்) 10
செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே –6-6-10
பதவுரை Show / Hide
செம் மொழி வாய், Sem Mozhi Vaai - உண்மை யுரைப்பவர்களும்
நால் வேதம் வாணர், Naal Vedham Vaanar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழும், Vazhum - வாழுமிடமான
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரென்னுந் திருப்பதியில்
மணிமாடம், Manimaadam - மணிமாடத்தில் எழுந்தருளியிக்கிற
செம் கண் மாலை, Sem Kan Maalai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரன் விஷயமாக
பொய் மொழி ஒன்று இல்லாத, Poi Mozhi Ondru Illadha - பொய்யுரைகள் சிறிதும் கலசாத
மெய்ம்மை ஆளன், Meimmai Aalan - ஸத்ய வசனத்தையுடையரும்
புலம் மங்கை குலம், Pulam Mangai Kulam - அழகிய திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendan - தலைவரும்
புலமை ஆர்ந்த அம் மொழி வாய், Pulamai Aarntha Am Mozhi Vaai - பாண்டித்யம் நிரம்பிய அப்படிப்பட்ட ஸ்ரீஸூதிகளை திருவாயிலே உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய
இன்பம் பாடல், Inbam Paadal - ஆநந்தமயமான (இந்தப்) பாசுரங்களை
வியன் உலகில், Viyan Ulagil - இப்பெரியவுலகத்திலே
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - (பெறும்பலனை) உள்ளபடி சொல்லப்புகுந்தால்,
நமனார் பாடி, Namanar Paadi - யமலோகத்திலுண்டாகக்  கூடிய
வெம் மொழி கேட்டு, Vem Mozhi Kettu - கடுஞ்சொற்களைக் கேட்டு அஞ்சாமல்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந்தக்கோர், Vinnavarkku Virundhu Aakum Perunthakoor - நித்யஸூரிகள் ஆதரித்துக் கொண்டாடும்படியான பெருமை பொருந்தியவராவர்