திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1511 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1511பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் – இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை) 4
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால் விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே –6-7-4
பதவுரை Show / Hide
ஒளியா, Oliya - மறைந்து நின்று (- (நறையூர், நின்ற நம்பி-.))
வெண்ணெய், Venney - வெண்ணெயை
உண்டான் என்று, Undan Enru - விழுங்கின குற்றத்திற்காக
ஆய்ச்சி, Aycci - யசோதையானவள்
விளியா, Viliya - கோபித்து
ஒண் கயிற்றால், On Kayitral - அழகிய தாம்பினால்
உரலோடு, Uralotu - உரலோடு சேர்த்து
ஆர்க்க, Arkka - கட்ட
ஆப்புண்டு, Appuntu - கட்டுண்டு
விம்மி அழுதான், Vimmi Aludan - விக்கிவிக்கி அழுத பெருமான்,-
மெல் மலர்மேல், Mel Malarmel - மெல்லிய பூக்களின்மீது
வண்டு, Vandu - வண்டுகள்
களியா, Kaliya - களித்து
கள் உண்ண, Kal Unna - தேனைப்பருக
காமர் தென்றல், Kamar Tenral - அழகிய தென்றல்காற்று
அலர் தூற்ற, Alar Turra - புஷ்பங்களை வீசியிறைக்க,
நளிர் வாய்முல்லை, Nalir Vaymullai - குளிர்ந்த முகத்தையுடைய முல்லைப் பூக்கள்
முறுவலிக்கும், Muruvalikkum - புன்சிரிப்புச் செய்யுமாபோலே விகளிக்க்பபெற்ற