திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1512 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1512பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து – கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள் அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் – அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே) 5
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக் கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே –6-7-5
பதவுரை Show / Hide
வில் ஆர் விழவில், Vil Ar Vilavil - (கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே) (- (நறையூர், நின்ற நம்பி-.))
வட மதுரை விரும்பி, Vata Maturai Virumbi - வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே)
விரும்பா, Virumba - எதிரிகளான
மல், Mal - மல்லர்களை
அடர்த்து, Adarthu - முடித்து (அதன் பிறகு)
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான், Kal Ar Thiral Thol Kanjanai Kaindhaan - மலை போன்று திரண்ட தோள்களை யுடையனான கம்ஸனைச் சீறிக் கொன்றவனும்
காளியன் மேல், Kaaliyan Mel - காளிய நாகத்தின் மீது
பாய்ந்தான், Paindhaan - குதித்து அதனை வலியத்தின் வலுமான பெருமான்,
சொல் ஆர் சுருதி, Sol Ar Suruthi - (குற்றமற்ற) சொற்கள் நிரம்பீய வேதங்களை
முறை ஓதி, Murai Othi - முறைப்படியே அதிகரித்து
சோமு செய்யும் தொழிலினோர், Somu Seyyum Thozhilinor - ஸோமயாகம் முதலியயாகங்களை நடத்துவதைக் கருமமாக வுடையராய்
நல்லார், Nallaar - விலக்ஷணரான
மறையோர் பலர் வாழும், Maraiyor Palar Vaalum - வைதிகர்கள் பலர்வாழுமிடமான