திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1513 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1513பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி – அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும் இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்) 6
வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான் வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான் பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே –6-7-6
பதவுரை Show / Hide
வள்ளி கொழுநன் முதலாய, Valli Kozhunaan Mudhalaaya - வள்ளியம்மைக்கு நாதனான ஸுப்ரஹ்மண்யன் முதலான (- (நறையூர், நின்ற நம்பி-.))
மக்களோடு, Makkalodu - புத்திரர்களோடு கூட
முக்கணான், Mukkanan - முகக்ண்ணனான ருத்ரன்
வெள்கி ஓட, Velgi Oda - வெட்கமடைந்து (எதிர் நிற்க மாட்டாமல் முதுகுகாட்டி) ஓடிப்கோக
விறல் வாணன், Viral Vaanan - பலிஷ்டனான பாணாஸுரனுடைய
வியன் தோள் வனத்தை, Viyan Thol Vanathai - பரம்பி தோள்களாகிற காட்டை
துணித்து, Thunithu - அறுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான்,
கமலத்திடை, Kamalathidai - தாமரைப்பூவிலே
பள்ளி பட்ட, Palli Patta - போய்ப் படுத்துக்கொண்டு திரும்பிவந்த
பகு வாய் அலவன், Paghu Vaai Alavan - பெரிய வாயையுடைய ஆண் நண்டின்
முகம், Mukam - முகத்தை
நள்ளி, Nalli - பெண் நண்டானது
நோக்கி, Nokki - பார்த்து
ஊடும், Oodum - பிரணய கலஹம் பண்ணப் பெற்ற
வயல், Vayal - வயல்களினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட