திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1514 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1514பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம் தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து) 7
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக் குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப் படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7
பதவுரை Show / Hide
மிடையா வந்த, Midayaa Vantha - நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற (- (நறையூர், நின்ற நம்பி -.))
வேல் மன்னர், Vel Mannar - வேற்படைக்கையரான
வீய, Veeya - தொலையும்படி
விசயன் தேர் கடவி, Visayan Ther Kadavi - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும்
ஒன்று வரை, Ondru Varai - கோவர்த்தனமென்கிற ஒரு மலையை
குடையா எடுத்து, Kudaiya Eduthu - குடையாகத் தூக்கிப் பிடித்து
ஆயர் கோ ஆய் நின்றான், Aayar Ko Aayi Nindraan - இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும்
கூர் ஆழி படையான், Koora Aazhi Padaiyaan - கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,-
வேதம் நான்கு, Vedham Naanku - நான்கு வேதங்களையும்
ஐந்து வேள்வி, Aindhu Velvi - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்
ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களையும்
ஏழ் இசை, Ezhu Isai - ஸப்த ஸ்வரங்களையும்
நடை ஆ வல்ல, Nadai Aa Valla - எப்போதும் போது போக்காகக்கொண்ட
அந்தணர், Andhanar - பிராமணர்
வாழ், Vaazh - வாழுமிடமான