திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1516 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1516பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து) 9
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான் நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே –6-7-9
பதவுரை Show / Hide
ஆறும், Aarum - (கங்கையாகிற) நதியையும் (- (நறையூர், நின்ற நம்பி -.))
பிறையும், Piraiyum - சந்திகலையையும்
அரவமும், Aravamum - ஸர்ப்பங்களையும்
அடம்பும், Adambum - அடப்பம் பூவையும்
சடைமேல் அணிந்து, Sadaimeel Anindhu - ஜடையின் மீது தரித்துக்கொண்டு
உடலம், Udalam - உடம்பிலே
நீறும்பூசி, Neerumpoosi - சாம்பல் பூசிக்கொண்டு
ஏறு ஊரும், Eru Oorum - ரிஷபத்தின் மேலேறி நடத்துகின்ற
இறையோன், Irayon - சிவபிரான்
சென்று, Sendru - வந்துகிட்டி
குறை இரப்ப, Kurai Irappa - தனது பிரமஹத்யா சாபம் விடுபடுமாறு பிரார்த்திக்க,
வரை மார்பு அகலத்து ­, Varai Maarbu Akalathu - மலைபோன்ற திரூமார்பிடத்தில் நின்றும்
மாறு ஒன்று இல்லா வாசம்நீர், Maaru Ondru Illaa Vaasamneer - ஒப்பற்ற பரிமளம் மிக்க (வியர்வை) நீரை
அளித்து, Alithu - எடுத்துக்கொடுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய, Naarum Pozhil Soozhndhu Azhagu Aaya - நறுமணம்மிக்க சோலைகளால் சூழப்பட்ட அழகிய