திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1517 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1517பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது – பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம் சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10
நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10
பதவுரை Show / Hide
நன்மை உடைய மறையோர் வாழ், Nanmai Udaiya Maraiyore Vaal - விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூரிலே
நின்ற, Nindra - நித்யவாஸஞ் செய்தருள்நின்ற
நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக
கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன், Kanni Mathil Vayal Soozh Mangai Kalyan - அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்
ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Malai - தமிழ்த்தொடையான இத்திருமொழியை
உலகில் பன்னி பாடுவார்பாடு, Ulagil Panni Paaduvaarpaadu - இவ்விபூதியிலே ஆராய்ந்து பாடுமவர்களிடத்தில்
பழ வினைகள், Pazha Vinaigal - முன்னைத் தீவினைகள்
சாரா, Saraa - அணுகமாட்டா;  (அன்றியும் அவர்கள்)
மன்னி உலகம் ஆண்டு, Manni Ulagam Aandu - நெடுநாள் வாழ்ந்திருந்து இவ்வுலகை அரசாட்சி புரிந்து
போய், Poi - (பின்பு, பரமபதத்திலே) சென்று
வானோர் வணங்க வாழ்வார், Vaanor Vananga Vaalvaar - அங்குள்ள நித்யமுக்தர்கள் ஆதரிக்கும்படிவாழப்பெறுவர்.