திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1524 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1524பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி) 7
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-7
பதவுரை Show / Hide
கட்டு ஏறு நீள் சோலை, Kattu Aeru Neel Solai - காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
காண்டவத்தை தீ மூட்டி விட்டானை, Kaandavaththai Thee Mootti Vittanai - காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும்
மெய்யம் அமர்ந்த பெருமானை, Meyyam Amarntha Perumaanai - திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும்
மட்டு ஏறு கற்பகத்தை, Mattu Aeru Karppagaththai - தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை
மாதர்க்கு ஆய், Maatharkku Aayi - (ஸத்யபாமைப்) பிராட்டிக்கா
வண் துவரை நட்டானை, Van Thavarai Nattaanai - (கொணர்ந்து) ஸ்தாபித்தவனுமான எம்பெருமானை