திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1527 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1527பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள் ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள் வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள்) 10
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே –6-8-10
பதவுரை Show / Hide
மன்னு, Mannu - (பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற (- (நல் நறையூர் நின்ற நம்பியை-;))
மதுரை, Madurai - வடமதுரையில்
வசுதேவர் வாழ் முதலை, Vasudevar Vazh Mudhalai - வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான
வம்பு அவிழ் தார், Vambu Avizh Thar - பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய்
கல் நவிலும் தோளான், Kal Navilum Tholan - மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த இத்திரு மொழியை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
பொன் உலகில், Pon Ulagil - பரமபதத்திற்சென்று
வானவர்க்கு, Vaanavarkku - அங்குள்ள நித்யஸூரிகளுக்கு
புத்தேளிர் ஆகுவர், Puttelir Aaghuvar - பூஜ்யராகப் பெறுவர்.