திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 153 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
153பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக் கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால் அவை காண முடியாதபடி ஓடிப்போய் விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க. 2
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2
பதவுரை Show / Hide
நின்ற, Nindra - நிலையாய் நின்ற
மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே
கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள்
ஓட, Oda - வெருண்டோடும்படி
செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய்
கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ)
வெண்ணெய், Vennai - வெண்ணையை
திரட்டி, Thiratti - திரட்டி
விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை
காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று, Indru - இந்த நாள்
நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த
திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்)
நீ, Nee - நீ
நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும்
எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய்