Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பெரியாழ்வார் திருமொழி (41 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
152பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 1
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1
வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்)
இவ் விரா, Iv vira - இன்றை இரவில்
தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை, Unnai - உன்னை
திண்ணென, Thinnaena - நிச்சயமாக
நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன்
எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும்
புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும்
கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு, Ingu - இங்கே
எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்
நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே
நாரணா, Naaraana - நாராயணனே
நீராட, Neeraada - நீராடுவதற்கு
வாராய், Vaaraay - வர வேணும்
153பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 2
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2
நின்ற, Nindra - நிலையாய் நின்ற
மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே
கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள்
ஓட, Oda - வெருண்டோடும்படி
செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய்
கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ)
வெண்ணெய், Vennai - வெண்ணையை
திரட்டி, Thiratti - திரட்டி
விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை
காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று, Indru - இந்த நாள்
நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த
திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்)
நீ, Nee - நீ
நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும்
எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய்
154பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 3
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3
பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய
முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்)
உண்ண, Unna - (நீ) உண்டு விட
கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும்
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க
ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும்
கூடி, Koodi - ஒன்று கூடி
அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும்
நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு
காய்ச்சின, Kaaychina - காய்ச்சின
நீர், Neer - வெந்நீரை
கடாரத்தில், Kadaarathil - சருவத்தில்
பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த, Vaaytha - பொருந்திய
புகழ், Pugazh - யசஸ்ஸையும்
மணி, Mani - நீல மணி போன்ற
வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட
நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும்
155பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 4
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4
கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய
புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே
வந்த, Vandha - (நலிவதாக) வந்த
கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம், Sakadam - சகடத்தை
உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு
வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள
பேய் மகள், Pei Magal - பூதனை யானவள்
துஞ்ச, Thunja - முடியும்படி
முலை, Mulai - (அவளுடைய) முலையிலே
வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த
பிரானே, Pirane - உபகாரகனே!
மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன்
அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய்
156பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 5
அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ
செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5
நம்பி, Nambi - (பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு, Seppu - பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள், Ila mel mulaiyaargal - இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி, Sirupuram pesi - (உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர், Sirippar - பரிஹஸிப்பார்கள் (அன்றியும்)
பாலில், Paalil - பாலிலே
அக்காரம், Akkaaram - வெல்லக் கட்டியை
கலந்து, Kalandhu - சேர்த்துப் (பிசைந்து)
அப்பம், Appam - அப்பத்தையும்
கலந்த, Kalandha - (அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி, Sitrundi - சிற்றுண்டியையும்
சொப்பட, Soppada - நன்றாக
நான் சுட்டு வைத்தேன், Naan suttu vaithen - நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதி ஏல், Thinnal uruthi ael - (நீ அவற்றை) தின்ன விரும்பினாயாகில்
சொப்பட, Soppada - நன்றாக
நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராட வேண்டும்
பிரான், Piran - ஸ்வாமியே!
சோத்தம், Soththam - உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய், Inge vaaray - இங்கே வாராய்
157பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 6
எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6
எண்ணெய் குடத்தை, Ennai kudathai - எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி, Urutti - உருட்டிவிட்டு
இள பிள்ளை, Ila pillai - (உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி, Killi - கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி, Ezhuppi - (தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை, Kannaai - கண் இமையை
புரட்டி விழித்து, Puratti vizhithu - தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு, Kazhai kandu - பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும், Seyyum - செய்து வருகிற
பிரானே, Pirane - ஸ்வதந்த்ரனே!
கனிகள், Kanigal - (நில்ல) பழங்களை
உண்ண, Unna - (நீ) உண்ணும்படி
தருவன், Tharuvan - (உனக்குக்) கொடுப்பேன்
ஒலி, Oli - கோஷியா நின்ற
கடல், Kadal - கடலினுடைய
ஓதம், Otham - அலைகளை யுடைய
நீர் போலே, Neer pole - ஜலம் போலே
வண்ணம் அழகிய, Vannam azhagiya - திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ, Nambi - உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும்
158பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 7
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே
சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7
எம்பிரானே, Embiraane - எம்பிரானே!
கறந்த, Karandha - (அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும், Nal paalum - நல்ல பாலையும்
தயிரும், Thayirum - தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், Kadainthu uri mel vaitha vennai - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்
பிறந்ததுவே முதல் ஆக, Pirandhadhuve mudhal aaga - (நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன், Pertru ariyen - கண்டறியேன்
சிறந்த நல் தாய், Sirandha nal thay - (எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் சிறந்த தாயார் )
அலர் தூற்றும், Alar thootrum - பழி சொல்லுகின்றாளே
என்பதனால், Enpathaanal - என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே, Pirar munne - அயலா ரெதிரில்
மறந்தும், Maranthum - ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன், Urai aada maatten - (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும்
159பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 8
கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8
கன்றினை, Kanrinai - கன்றினுடைய
வால், Vaal - வாலிலே
ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி
கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்)
உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து, Erindhu - வீசி
பின், Pin - பின்பு
ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய்
ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ)
நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே!
நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்)
நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த
நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்)
நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய்
160பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 9
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9
பூணி, Pooni - பசுக்கள் கட்டிய
தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே
புக்கு, Pukku - நுழைந்து
புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை
காண, Kaana - பார்ப்பதற்கு
பெரிதும், Perithum - மிகவும்
உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன்
ஆகிலும், Aagilum - ஆனாலும்
கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள்
காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள்
என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும்
161பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 10
கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10
கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும்
மலி, Mali - சிறந்த
மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை
உகந்து, Ugandhu - விரும்பி
வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய
அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின
ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை
பார், Paar - பூமியிலே
மலி, Mali - சிறந்த
தொல், Thol - பழமையான
புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சீர்மலி, Seermali - அழகு நிறைந்த
செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய
பாடல், Paadal - (இப்) பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
யாதும், Yaadhum - சிறிதும்
தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர்
182பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 1
ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1
தேனில், Thenil - தேனைக் காட்டிலும்
இனிய, Iniya - போக்யனாயிருக்கிற
பிரானே, Pirane - ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும்
சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு)
உன், Un - உன்னுடைய
கரிய, Kariya - ஸ்யாமமான
திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி
வாட, Vaada - வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை
மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு
நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து
அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை;
செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை
சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி
வாராய், Vaaraay - வருவாயாக
183பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 2
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2
கண்கள், Kangal - கண்களானவை
உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால், Kandaal - பார்த்தால் (அதை)
ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே!
உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும்
உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே!
திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா, Manavaala - நாயகனே!
திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே
கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே!
மணம், Manam - வாஸனை
மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்
184பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 3
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3
மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை, Pattai - பட்டாடைகளையும்
கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு
காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி, Keeri - கிழித்துப் போட்டு
நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம்
தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய், Seyvaai - செய்பவனே!
நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய், Endhaay - ஸ்வாமியே!
பச்சை, Pachai - பசு நிறமுள்ள
தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும்
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்
185பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 4
தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4
புருவம், Puruvam - புருவங்களையும்
கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும்
நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த, Polindha - விளங்குகின்ற
முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே
உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய
நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு;
மருவும், Maruvum - மருவையும்
தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன;
இவை, Ivai - இவற்றை
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்
186பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 5
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5
புள்ளினை, Pullinai - பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு, Poru - யுத்தோந்முகமான
கரியின், Kariyin - குவலயாபீடத்தின்
கொம்பு, Kombu - கொம்பை
ஒசித்தாய், Osithaai - பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை, Thalai - தலையையும்
கொண்டாய், Kondai - அறுத்தவனே!
நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க
அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல்
அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய, Thelliya - தெளிவான
நீரில், Neeril - நீரிலே
எழுந்த, Ezundha - உண்டான
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை
சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய்
187பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 6
எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6
நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன்
பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்;
ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல்
கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள், Theemaigal - தீம்புகளை
செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை
கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே!
தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)

தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென, Sikkenna - வலிமையாக
மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த
பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய்
188பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 7
குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7
குடங்கள், Kudangal - பல குடங்களை
எடுத்து, Eduthu - தூக்கி
ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து
கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய
எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே
மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல
என் மைந்தா, En maindha - எனது புத்திரனே!
முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய், Theendai - பிளந்தவனே!
குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில்
கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற
எம் கோவே, Em kove - எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய்
189பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 8
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8
சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய், Vallaai - வல்லவனாய்
அவனை, Avanai - அந்த மாலிகனை
நீ, Nee - நீ
சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை
அறியும், Ariyum - அறிய வல்ல
பிரானே, Piraane - ப்ரபுவே!
அணி, Ani - அழகிய
அரங்கத்தே, Arangathey - கோயிலிலே
கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே!
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும்
இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய்
190பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 9
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9
அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள், Amarrgal - தேவர்கள்
சூழ, Soozha - சூழ்ந்திருக்க
அங்கு, Angu - அவர்கள் நடுவில்
அண்டத்து, Andhathu - பரம பதத்தில்
இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே!
தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய
நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில்
உறைவாய், Uraivaai - வஸிப்பவனே!
தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா, Manavaalaa - கொழுநனே!
உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும்
உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில்
துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே!
நான், Naan - நான்
உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க, Ugakka - மகிழும்படி
கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய்
191பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 10
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10
செண்பகம், Senbakam - செண்பகப் பூவும்
மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும்
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும்
எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும், Poovum - மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்;
இன்று, Indru - இப்போது
இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி
வா, va - வருவாயாக
என்று, Endru - என்று
பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி, Aaychi - யசோதை
மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும்
பத்தே, Patthe - ஒருபத்தே!
192பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 1
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1-
சந்திரன், chandiran - சந்த்ரனானவன்
மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றவனே!
அழகனே, azhagane - அழகு உடையவனே!
இந்திரனோடு, indiranodu - இந்திரனும்
பிரமன், piraman - ப்ரஹ்மாவும்
ஈசன், eesan - ருத்ரனும்
இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம், ellam - (ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள்
இது, idhu - இக் காலம்
அம், am - அழகிய
அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக
193பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2
மதிள், madhil - மதிளரணை யுடைய
திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றருளினவனே!
மேல், mel - (என்) மேல்
ஒன்றும், ondruum - துன்பமும்
நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே!
உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன்
பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன;
அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில்
மன்றில், manril - நாற் சந்தியில்
நில்வேல், nilvael - நில்லாதே;
என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய்
நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக
194பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 3
செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3
ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும், muppothum - ­மூன்று காலத்திலும்
வானவர், vaanavar - தேவர்கள்
ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ)
செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும்
(சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும்
சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க)
அப்போது, appodhu - அக் காலத்தில்
நான், naan - நான்
உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல
போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய்
அடிசிலும், adisilum - சோற்றையும்
உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய்
இப்போது, ippodhu - இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்
எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய்
195பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 4
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4
கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன்
கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே!
வண்ணம், vannam - திருமேனி நிறம்
வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை
ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே, vallale - உதாரனே!
எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள்
வந்திட்டு, vandhittu - வந்திருந்து
மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு
காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்;
என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய்
196பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 5
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5
இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள்
பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல்
போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது;
எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்!
ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி, un meni - உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய்
197பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 6
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6
மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும்
மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்!
கஞ்சன், kanjan - கம்ஸனானவன்
நின் மேல், nin mel - உன் மேலே
கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு
கரு நிறம், karu niram - கரு நிறத்தையும்
செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய
பேயை, peyai - பூதனையை
வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான், Vidutthaan - அனுப்பினான்
என்பது, Enbadhu - என்பதான
ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும்
உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு
நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன்
அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய்
198பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 7
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7
கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய
சகடும், Sagadum - சகடாஸுரனையும்
மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ, Nee - நீ
பேயை, Peyai - பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி
ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்!
இது, Idhu - இப்போது
பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்
199பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 8
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8
இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை
உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ
இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு
என்றும், Endrum - எந்நாளும்
அரியாய், Ariyaai - அருமையானவனே!
கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய
களிறு, KaLiru - குவலயாபீடத்தை
அட்ட, Atta - கொன்ற
கோவே, Koode - ஸ்வாமியே!
கொடு, Kodu - கொடுமை தங்கிய
கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய
நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே
கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்!
செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய், Pillay - குழந்தாய்!
அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில்
கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல
கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்;
கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய்
200பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 9
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9
இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர், Neer - தீர்த்தத்தை
சங்கில், Sangil - சங்கத்திலே
கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து
எழில், Ezhil - விலக்ஷணரான
மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்;
நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று
தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே
சில நாள், Sil naal - சில காலம்
தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை
கொள்ளாய், Kollaay - கேட்பாயாக;
தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்!
இன்று, Indru - இப்போது
நான், Naan - நான்
திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக
201பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 10
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10
மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி
மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த
மாற்றம், Maatram - வார்த்தையை
போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி
வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல
விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - பாமாலையினுடைய
பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை
கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல
பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது
வினை, Vinai - வினைகளெல்லாம்
போம், Poom - கழிந்து விடும்
463பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1
சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண், Than - குளிர்ந்த
திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை
உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை
வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக
நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற
நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா, Thamodhara - தாமோதரனே!
சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும்
உன், Un - உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின், Nin - உன்னுடைய
அருளே, Arule - கருணையே
புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்
இனி, Ini - இப்படியான பின்பு
திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து
என், En - எதுவாயிருக்கின்றது?
464பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2
பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான
பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே!
நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது
இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு
வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது
அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற
அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது
465பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 3
எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3
எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன்
என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை
இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி, Odi - ஓடிப் போய்
தூறுகள், Thoorugal - புதர்களில்
பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன
466பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4
தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற
தோள், Thol - தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே, Sevakane - வீரனே!
கடல், Kadal - திருப் பாற் கடலை
கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை, Kalasathai - கலசத்தில்
நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல
உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு
உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்
கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும், Kootramum - யமனும்
என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன்
467பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5
என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர், En uyir - என் ஆத்மாவை
காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை
நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல
உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள் , Ennul - என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன்
என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன்
468பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 6
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6
மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க, Adanga - அழியும்படி
மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய
விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல்
எல்லாம், Ellaam - எல்லாவற்றையும்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்)
என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி
இனி , Ini - இனி மேல்
போகின்றது, pogindrathu - போவதானது
எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து?
469பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 7
பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7
பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில்
கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை
பொறித்த, Poritha - நாட்டின்
பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல்
திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது
பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்
மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்
மல், Mal - மல்லரை
அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும்
உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே
470பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8
நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே!
எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி
வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய்
என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில்
நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன்
471பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9
பனி, Pani - குளிர்ந்த
கடலில், Kadalil - திருப்பாற் கடலில்
பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்)
ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து
என், En - என்னுடைய
மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும்
மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)
472பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10
தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10
தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல
சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும்
மதிள், Madhil - மதில்களை யுடைய
துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு
என் பால், En paal - என்னிடத்தில்
இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)
473பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 11
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11
வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய
குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்)
உதித்த, udhitha - அவதரித்த
விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய
மனத்து, Manathu - ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை, Kovalanai - கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்
ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல, Saayai pola - நிழல் போல
அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்