திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1531 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1531பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன்) 4
துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே –6-9-4
பதவுரை Show / Hide
துன்று, Thunru - நெருங்கியும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
ஒளி, Oli - ஒழுங்குபெற்று மிருக்கிற
துகில் படலம், Thugil Patalam - த்வஜபடங்களின் திரள்கள்
மாளிகை மேல், Maaligai Mel - மாளிகைகளின் மேல்
எங்கும் துன்னி, Engum Thunni - எல்லாவிடங்களிலும் நிபிடமாய்
ஆர நின்று, Aara Nindru - பரம்பியிருந்து
வான் மூடும், Vaan Moodum - ஆகாசத்தை மறையா நின்றதாய்
நீள் செல்வம, Neel Selvam - நிறைந்த செல்வத்தை யுடையதான
மன்று ஆர, Manru Aara - வெளிநிலமெங்கும்
குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும்
வரை எடுத்து, Varai Eduthu - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி
மழை தடுத்த, Mazhai Thadutta - மழையைத்  தடைசெய்தவனும்
குன்று ஆரும் திரள் தோளன், Kundru Aarum Thiral Tholan - மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய
குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே