திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1533 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1533பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில் ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை- மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது) 6
பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும் மின்னத் தண் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6
பதவுரை Show / Hide
மின்ன, Minna - (மேற்கே) மின்னல் கண்டவாறே (- (வியன் பொன்னி, திருநறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
பொன், Pon - பொன்களையும்
முத்தும், Muthum - முத்துக்களையும்
அரி உகிரும், Ari Ugrum - சிங்கங்களின் நகங்களையும்
புழை கைமா கரி கோடும், Puzhai Kaimaa Kari Kodum - த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும்
தண் திரை உந்தும், Than Thirai Undum - குளிர்ந்த அலைகளின் முகமாகக் கொழிக்கின்ற
மின் ஒத்த நுண், Min Oththa Nun - மின்னல் போன்று அதிஸூக்ஷ்மமான
மருங்குல், Marungul - இடையையுடையளாய்
மெல் இயலை, Mel Iyilai - ஸௌகுமார்யத்தை ஸ்வபாவமாக உடையளான பிராட்டியை
திருமார்பில், Thirumaarbil - திருமார்பிலே
மன்ன, Manna - பொருந்தும்படியாக
தான் வைத்து உகந்தான், Thaan Vaiththu Uganthaan - தரித்துக்கொண்டு திருவுள்ளமுவந்திருக்கிற பெருமானுடைய
மலர் அடியே, Malar Adiye - திருவடித்தாமரைகளையே