திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1536 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1536பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார்) 9
மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9
பதவுரை Show / Hide
மறை ஆரும், Marai Aarum - வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட (- (நீள் செல்வத் திருநறையூர்-;) (இணை அடியே நெஞ்சே அடை-.))
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய யஜ்ஞங்களிலுண்டான
கொழும்புகை, Kozhumbugai - நல்ல புகையானது
வளர்ந்து போய், Valarnthu Poi - மேலே கிளம்பிப்போய்
எங்கும் நிறை ஆர வான்மூடும், Engum Nirai Aara Vaanmoodum - எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற
பிறை ஆரும் சடையானும், Pirai Aarum Sadaiyanum - சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும்
பிரமனும், Brahmanum - நான்முகனும்
முன், Mun - முன்னேநின்று
தொழுது ஏத்த, Thozhudhu Aetha - வணங்கித்துதிக்கும்படி
இறை ஆகி நின்றான் தன், Irai Aagi Nindraan Than - ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய