திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1537 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1537பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10
பதவுரை Show / Hide
திண் களகம் மதிள் புடைசூழ், Thin Kalagam Mathil Pudaisool - திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்
நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக
வண் களகம், Van Kalagam - அழகிய அன்னப்பறவைகள்
நிலவு எறிக்கும், Nilavu Erikkum - நிலாப்போல் விளங்கப்பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
மங்கை நகராளன், Mangai Nagaralan - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார்
பண்கள் அகம் பயின்ற, Pankal Agam Payindra - பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த
சீர், Seer - சீர்மை பொருந்திய
பாடல் இவை பத்தும், Paadal Ivai Paththum - இப்பாசுரங்கள் பத்தையும்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
விண்கள் அகத்து, Vingkal Akaththu - மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில்
இமையவர்ஆய், Imaiyavar Aayi - நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய்
வீற்றிருந்து, Veetrirundhu - பெருமைபெறவிருந்து
வாழ்வார், Vaalvaar - வாழப்பெறுவர்.