திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1539 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான் லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம்) 2 | விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2 | பதவுரை Show / Hideமுனநாள், Munanhaal - முனபொருகால், (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) விடம் உடைய அரவம் தான், Vidam Udaya Aravam Thaan - விஷத்தையுடைத்தான காளியநாகமானது வெருவ, Veruva - அஞ்சும்படியாக முன், Mun - இடைப்பிள்ளைகளின் முன்னே தட தாமரை பொய்கை நீர் புக்கு, Tada Thamarai Poigai Neer Pukku - பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து செருவில், Seruvil - (அந்த நாகத்தோடு போர் செய்ததில் மிக்க, Mikka - மேன்மைபெற்ற தாளாளன், Thaalalan - திருவடிகளை யுடையவனும் கேழல் ஆகி, Kezhal Aagi - வராஹமூர்த்தியாகி வையம், Vaiyam - பூமியை இடந்தான், Idandhaan - குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும் ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டடியாலே உலகை, Ulagai - உலகங்களை நடந்தானுடைய, Nadandhaanudaiya - அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய |