திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1541 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி – முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் – நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே) 4 | கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-4 | பதவுரை Show / Hideகல் ஆர் மதிள் சூழ் கச்சிநகருள், Kal Aar Mathil Soozh Kachinagarul - கருங்கல்லால் கட்டப்பட்ட திருமதிள்களால் சூழப்பட்ட காஞ்சீபுரத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே -.)) நச்சி, Nachchi - வஸிக்கவிரும்பி எல்லா உலகும் வணங்க, Ella Ulagum Vananga - லோகமெல்லாம் வணங்குமாறு பாடகத்துள், Paadakaththul - திருப்பாடமென்னுந் திருப்பதியில் இருந்த, Irundha - வீற்றிருக்கின்ற அம்மான், Ammaan - ஸ்வாமியும், இலங்கை கோன், Ilankai Kon - லங்காதிபதியான ராவணனுடைய வல் ஆள் ஆகம், Val Aal Aagam - மிகவும் பலிஷ்டமான சரீரத்தை வில்லால் முனிந்த, Villal Munintha - வில்லாலே சீறியழித்த எந்தை, Endhai - ஸ்வாமியும் விபீடணற்கு நல்லானுடைய, Vipeedanarku Nallaanudaiya - விபீஷணாழ்வான் விஷயத்தில் நன்மை புரிந்தவனுமான எம்பிரானது |