திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1542 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது – இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து – இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே) 5 | குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகாலத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) குடை ஆம் வரையால், Kudai Aam Varaiyaal - குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால் நிரை, Nirai - பசுக்கூட்டங்களை காத்தபெருமான், Kaathaperumaan - (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும் மருவாத விடை ஏழும் வென்றான், Maruvaadha Vidai Ezhum Vendraan - எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும் கோவல் நின்றான், Koval Nindraan - திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும் தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையிலிருந்தவர்களாய் அடையா, Adaiyaa - பணியாதவர்களான அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள் வீய, Veeya - அழியும்படி பொருது, Poruthu - போர்புரிந்து வெம் கூற்றம், Vem Koottram - கொடியமிருத்யுவானவன் மேவி, Mevi - (அஞ்சாமல்) பொருந்தியிருந்து நடை ஆ, Nadai Aa - இதுவே காரியமாக உண்ண கண்டான், Unna Kandan - (இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய |