திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1545 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் – தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே) 8 | கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8 | பதவுரை Show / Hideகடு, Kadu - கடுமையான (- (நாமம் நமோநாராயணம்-.)) கால், Kaal - காற்றோடு கூடின மாரி, Maari - மேகமானது கல்லே பொழிய, Kalle Pozhiya - கற்களையே வர்ஷிக்கையில் எமக்கு அல்லே என்று, Emakku Alle Endru - ‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று படு்ங்கால், Padungkal - நெஞ்சிலேபட்டு ஆயர், Aayar - இடையர்கள் நீயே சரண் என்று அஞ்ச, Neeye Saran Endru Anja - (எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க அஞ்சாமுன், Anjamun - அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே நெடு கால் குன்றம் ஒன்று, Nedu Kaal Kuntram Ondru - சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை குடை ஏந்தி, Kudai Aendhi - குடையாகவெடுத்துப் பிடித்து நிரையை, Niraiyai - பசுக்கூட்டங்களை சிரமத்தால், Sirama Thaal - ஆயாஸத்தினால் நடுங்காவண்ணம், Nadungaavannam - நோவுபடாதபடி காத்தான், Kaathaan - ரக்ஷித்த பெருமானுடைய |