திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1549 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட – நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு – பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ) 2 | வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2 | பதவுரை Show / Hideவற்றா முத நீரொடு, Vatraa Muda Neerodu - ஒருகாலும் வடியாத கடல்களையும் (- (அருள் தந்திடு கிருபைசெய்தருளவேணும்.)) மால்வரை ஏழும், Maalvarai Ezhum - பெரிய குலபர்வதங்களேழையும் முன், Mun - முன்பொருகால் துற்று ஆக துற்றிய, Thuttru Aaga Thuttriya - ஒரு கபளமாக வாரி விழுங்கின தொல் புகழோனே, Thol Pugazhone - சாச்வதமான கீர்த்தியையுடையவனே! அற்றேன் அடியேன், Attren Adiyen - உனக்கே உரியேனாய்த தீர்ந்திருக்கிற அடியேன் உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடுகின்றேன்; பெற்றேன், Pettren - இப்படி உன்னையே அழைக்கும்படியான பாக்யத்தைப் பெற்றேன்; |