திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1550 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் – ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார்) 3 | தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3 | பதவுரை Show / Hideஉன் அருள் என்னிடை வைத்தாய், Un Arul Ennidai Vaiththai - (இனி இவ்வருளை) உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (- (திருநறையூர்ப் பெருமானே!)) பிறர்க்கு, Pirarkku - வேறொருவர்க்கும் தாரேன், Thaaren - விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்; கார் ஏய் கடலே, Kaar Aey Kadale - மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும் மலையே, Malaiye - திருமலையையும் திருக் கோட்டியூரே, Thiruk Kottiyure - திருக்கோட்டியூரையும் உகந்தாயை, Uganthayai - திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை அடியேன் உகந்து, Adiyen Uganthu - அடியேன் விரும்பி ஆரேன், Aren - பர்யாப்தி பெறாதவனாகி அதுவே பருகி களிக்கின்றேன், Adhuve Parugi Kalikkindren - அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன் |