திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1551 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே-தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை உடையனாய் இருக்கிறபடி) 4 | புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4 | பதவுரை Show / Hideபுள் வாய் பிளந்த, Pul Vaai Pilantha - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்த புனிதா, Punithaa - பரமபவித்திரனே! என்று அழைக்க, Endru Azhaikka - என்று நான் கூப்பிட்ட வளவிலே உள்ளே நின்று, Ullae Nindru - என்னுள்ளே பொருந்தி என் உள்ளம் குளிரும் ஒருவா, En Ullam Kulirum Oruvaa - என் மனத்தில் தாபந்தணிக்க வல்ல அத்விதீயனே! கள்வா, Kalvaa - ஒருவருமறியாமல் பெருநன்றிகள் செய்பவனே! கடல்மல்லை கிடந்த கரும்பே, Kadalmallai Kidandha Karumbee - திருக்கடன் மல்லையில் பள்ளிகொண்டிருக்கிற பரமபோக்யனே! வள்ளால், Vallal - உதாரனே! உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்? (ஒருநாளும் மறவேன்.) |